2024-ம் ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - மீனம்

2024-ம் ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - மீனம்

அறிவுடனும், ஆற்றலுடனும் செயல்படும் மீன ராசி வாசகர்களே!
 
இந்த வருடம் 01-05-2024 முதல், இதுவரை தனஸ்தானத்தில் இருந்த குரு பகவான் இனி முயற்சி ஸ்தானத்தில் அமர்கிறார். வருமானத்திற்கு தகுந்தபடி உங்களின் பொருளாதார நிலையை உயர்த்தித் தருவார்.
 
குரு வரும் காலத்தில் கீர்த்தி ஸ்தானத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தையும் பாக்கியஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் பார்ப்பதால் பொருளாதார வளர்ச்சிக்கு வழி கிடைக்கும். திருமண காரியங்களும், வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகளும் விரைவில் நடக்கும். நினைத்தபடி செயலில் இறங்கி வளம் பெற செய்வீர்கள். எந்த வித காரியமாக இருந்தாலும் பயரையாவது துணை கொண்டு செயல்படும் போது அது வெற்றியைப் பெற்றுத் தரும்.
 
விரும்பிய பெண் மணப்பதற்கும், குடும்ப ஒற்றுமைக்கும் நல்ல பலன் கிடைக்கப் பெறுவீர்கள். சுமையாக இருந்த சில காரியம் மேன்மை அடையும். எதிரிக்கும் தீங்குகள் நினைக்காத உங்களின் பண்புக்கு.. மேலும் நல்ல காலம் வந்து சேரும். உறுதுணையாக உதவி செய்ய உங்களின் நண்பர்கள் பயன்படுவார்கள். 
 
தீர்த்த யாத்திரை சென்று வருதல். ஆன்மீக செயல்களில் ஈடுபாடு கொள்தல் என பல விடயங்களில் சரியான நேரத்திற்கு உங்களின் கடமையையும் செய்து வருவீர்கள். புதிய திட்டங்களுக்கான செயல் வடிவம்.. உங்களுக்கு தேடி வந்தடையயும்படி அமையும். குழந்தை பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். எதை தெரிவு செய்வது என்று யோசித்து கொண்டிருந்த உங்களுக்கு.. விரைவில் அதற்கான தீர்வு கிடைக்கும்.
 
முக்கிய நபரின் சந்திப்பு உங்களின் வாழ்வில் மேன்மையை பெற்று தரும். லாபாதிபதி சனி விரையத்தில் இருந்தாலும் குரு பார்வையால்.. உங்களுக்கு கிடைக்க வேண்டிய பணபலன்கள்.. தாமதமின்றி கிடைக்கும். பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். வெளிநாட்டு தொடர்புகளில் முன்னேற்றம் உண்டாகும். கலைதுறையினருக்கு நல்ல வரவேற்பும், புதிய ஒப்பந்தங்களும் அமையும். அரசியலில் ஆலோசகராக இருந்து வழிநடத்துவீர்கள். பணபுழக்கம் இருக்கும்.
 
பரிகாரம்:
 
வியாழக்கிழமைகளில் காலை 06.00 - 07.00 மணிக்குள் நவகிரக குருவுக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு, மஞ்சள் அர்ச்சனை செய்து வர, உங்களின் வாழ்வில் எதிர்பாராத திருப்பமும், பண பலமும் உண்டாகும்.
 
கணித்தவர்: 
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554